எட்டியம்மன் வரலாறு

எட்டியம்மன் வரலாறு

      அகிலத்தில் அனைத்திற்கும் ஆதியும்
அந்தமும், மூலமும் முடிவுமான அன்னை ஆதிபராசக்தி எத்தனையோ அவதாரம் எடுத்து மக்களையும் மற்ற உயிர்களையும் காத்து வருகின்றாள்.

எரும்பூண்டி:-

      திருவண்ணாமலையில் இருந்து மேல்மலையனூர் செல்லும் வழியில் சுமார் 20 கி.மி தொலைவில் அமைந்துள்ளது எரும்பூண்டி என்னும் கிராமம். விவசாயத்தை அடிப்படை தொழிலாக கொண்ட இந்த கிராமத்தில் பார்க்கும் திசையெல்லாம் கோவில்களைக் கொண்டு எக்காலமும் இறைவன் திருவருளால் செழித்தோங்குகிறது.

எட்டியம்மன்:-

          எரும்பூண்டி கிராமத்தின் ஈசான்ய திசையில் அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக தோன்றி வடக்கு திசை நோக்கியவாறு எட்டியம்மன் என்ற பெயரில் தன்னை நாடி வரும் பக்தர்களை தேடி வந்து அருள்புரிகிறாள்.


மண்ணில் உதித்த விதம்:-

      ஆதிகாலத்தில் விவசாயி
ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்ச வாய்க்கால் வெட்டினார். அப்போது தெரியாமல் மண்வெட்டி பூமிக்கடியில் இருந்த அம்மன் சிலையில் பட்டு சிலையின் மேல் ஒரு பாகம் சிதறி விட்டது. அப்போது கல்லில் இரத்தமாக வழிவதை பார்த்த விவசாயி அதிர்ந்து போனார். அந்த பகுதியில் இருந்த மக்கள் சுற்றி நின்று ஆச்சர்யத்துடன் பார்த்தனர். அப்போது ஒரு சிறுமியின் மீது அம்மன் அருள் வந்து நான் தான் எட்டியம்மன் நான் இங்கு சுயம்புவாக வளர்ந்து வந்தேன். நான் இங்கேயே குடியிருந்து உங்களையும், ஊர் மக்களையும் காத்துரட்சிக்கின்றேன். எனக்கு சரியான பூஜைகள் கொடுத்து திருவிழாக்கள் செய்து வாருங்கள் என்றாள். அதன்படியே ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி அம்மனுக்கு ஆலயம் எழுப்பி வெள்ளி, செவ்வாய், அமாவாசை, பௌர்ணமி தினங்களில் பூஜைகள் கொடுத்து வருடத்திற்கு மூன்று திருவிழாக்கள் செய்து வருகின்றனர்.

    அம்மன் சிலையில் மண்வெட்டி பட்டதால் இன்றைக்கும் சிலையின் மேல் ஒரு பாகம் உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

திருவிழாக்கள்:-

1.சித்திரை - கூழ் வார்த்தல் 

2.ஆடி - ஊரணி பொங்கல்

3. தை - மந்தவெளி திருவிழா

    பௌர்ணமி பூஜை, மற்றும் அமாவாசை திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது.
    அமாவாசை திருவிழா அன்று  ஊரில் உள்ள ஆண்கள் எல்லோரும் வீட்டுக்கு ஒருவராக மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு அன்னை கெங்காதேவி கோவில் குளத்தில் நீராடிவிட்டு பக்தர்கள் நீர் எடுத்து சென்று நள்ளிரவில் அதாவது  பன்னிரண்டு மணிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்படும். அப்போது பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தம் வழங்கப்படும்.

அக்கா தங்கைகள்:-

      எட்டியம்மன், மாரியம்மன், காளியம்மன்‍, முத்தாலம்மன், முகமாரியம்மன், கெங்கையம்மன் இவர்கள் ஆறுவரில் எட்டியம்மன் மூத்தவள் என்பார்கள். இவர்களோடு மேல்மலையனூரில் குடிகொண்டுள்ள அன்னை அங்காளபரமேஸ்வரியோடு மொத்தம் ஏழு பேர். இவர்கள் எழுவரும் இந்த எரும்பூண்டி கிராமத்தில் திசைக்கு ஒரு தெய்வமாக எழுந்தருளி சகல மக்களையும் காத்து வருகின்றனர். இவர்கள் ஏழு பேரில் எட்டியம்மன் கிராமதேவதையாக விளங்குகின்றாள்.

எட்டியம்மன்
https://youtu.be/iiBD0PBZqds

Contact:-.  VENKATESAN  8838815687
Whatsapp:- 7502650065

Comments

Popular posts from this blog

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வரலாறு

வீரட்டேஸ்வரர் திருக்கோவில்