வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
உ
வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
எரும்பூண்டி
சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லா அருள்சோதியாக நின்ற திருண்ணாயில் இருந்து அன்னை அங்காளபரமேஸ்வரி சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய மேல்மலையனூர் செல்லும் வழியில் சுமார் 20 கி.மி தொலைவில் அமைந்துள்ளது எரும்பூண்டி என்னும் கிராமம்.
எரும்பூண்டி
கிராமத்தின் சிறப்பு:-
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிராமத்தில் நாடகங்கள், பஜனை, கோலாட்டம், கும்மி போன்ற நாட்டுப்புற கலைகள் அடிக்கடி நடைபெறும். மற்றும் வரலாற்றின் பல சுவடுகளை தாங்கி நிற்கிறது இந்த கிராமம்.
1. பழமையான கோவில்கள்
2. கல்வெட்டுகள்
3. மாதம் ஒரு திருவிழா
4. எங்கு பார்த்தாலும் கோவில்
கோவில்கள்:-
சிவன்கோயில் 2 (வீரட்டேஸ்வரர், தாண்டேஸ்வரர்), பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், சப்த சக்திகள் (எட்டியம்மன், மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன்,முகமாரியம்மன்,கெங்கையம்மன்), சப்த கன்னிகள், காமாட்சி அம்மன், அய்யனார், வீரபத்திரன், முனீஸ்வரன் என எங்கு பார்த்தாலும் கோவில்கள் தெரியும். ஆனால் இவை அனைத்தும் இப்போது பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து காணப்படுகிறது.
கிராமத்தின் மத்தியில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு செழும்பாலீஸ்வரி உடனுறை வீரட்டேஸ்வரர் திருக்கோவில். இத்திருக்கோவிலின் கீழே இடும்பன், மலையின் மீது பலிபீடம், கொடிமரம்,
நேர்முக நந்தி:-
பொதுவாக சிவன் கோவில்களில் உள்ள நந்தி தலைசாய்ந்து காணப்படும். ஆனால் இந்த திருக்கோவிலில் வீற்றிருக்கும் நந்தியம்பெருமான் நேர்முகத்தோடு காட்சி தருகிறார்.
இது நந்தனார் சரித்திரத்திற்க்கு முற்பட்டது என்பதை அறியலாம். இந்த நந்தனார் சரித்திரத்திற்க்கு பின்னர் கட்டப்பட்ட சிவன் கோவில்களில் நந்தியின் கழுத்து சற்று வளைந்து காணப்படும்.
விநாயகர்
இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் ஆறுமுகம் பன்னிரண்டு கைகளோடு வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்.
, தென்முக கடவுள் தட்சிணாமூர்த்தி
மற்றும் சண்டிகேஸ்வரர்
ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
திருத்தலத்தின் மகிமை:-
இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கினால் சகல விதமான பிரச்சினைகள் தீரும், தீராத வியாதிகள் நீங்கும்.
இந்த ஆலயத்தில் திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு முதலில் ஆண் குழந்தைதான் பிறக்கும்.
மேலும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஐப்பசி மாதம் நடைபெறும் அன்னாபிஷேக சாதத்தை வாங்கி உண்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருக்கோவில் பெருமை:-
இந்த மலையில் அமைந்துள்ள சிவபெருமான் சித்தர்களாலும், முனிவர்களாலும் மற்றும் அன்னை ஆதிபராசக்தியின் அவதாரமான அங்காளபரமேஸ்வரி அம்மனாலும் ( பிரம்மாவின் தலையை கொய்த சிவபெருமானுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோசத்தை நீக்க அன்னை பார்வதி தேவி செய்வதறியாது தவித்த போது மகாவிஷ்ணு, அகோர உருவுடன் இருந்த பார்வதியை பார்த்து மேல்மலையனூர் சென்று தவமிரு என்று சொல்ல, அன்னை பார்வதி திருவண்ணாமலையில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடி எழுந்து அகோர உருவம் மாறி ஒரு வயதான மூதாட்டி போல் உருவெடுத்து மேல்மலையனூர் நோக்கி செல்லும் வழியில் இந்த எரும்பூண்டியில் வீற்றிருக்கும் சிவபெருமானை வணங்கி வலம் வந்து வழிபட்டு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்துவிட்டு செல்லும் வழியில் பொழுதுபோனதால் அன்றிரவு தாயனூரில் தங்கியிருந்து மறுநாள் காலையில் மேல்மலையனூர் சென்று பூங்காவனம் நடுவே மண்புற்றாக தவமிருந்து அங்காள பரமேஸ்வரி சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினாள்.) வணங்கப்பட்ட பெருமைக்குரியது இந்த திருக்கோவில்.
தீர்த்தம்:-
கோவிலின் மலையடிவாரத்தில் காணப்படும் சுனை கடுமையான வறட்சி காலத்திலும் வற்றாத நீரூற்றாக காணப்படுகிறது. இந்த சுனையில் இருந்து நீர் எடுத்து சென்று சுவாமிக்கு திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யப்படுகிறது.
திருக்கோவில் அமைப்பு:-
சுற்றிலும் பசுமையான சூழலில், பறவைகளின் இனிமையான கானங்களுக்கு மத்தியில் கண்களைக் கவரும் அமைப்பில் அமைந்துள்ள இந்த கோவில் விஜயநகரப் பேரரசர் காலத்தில் முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்:-
1. சித்திரா பௌர்ணமி
2. ஐப்பசி அன்னாபிஷேகம்
4. மார்கழி திருவாதிரை
5. மாசி சிவராத்திரி
6. பங்குனி உத்திரம்
மற்றும் மாதம் இரண்டு பிரதோஷம், பௌர்ணமி, சதுர்த்தி, கிருத்திகை, தமிழ் மாதபிறப்பு நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
மாற்றுமதத்தினரின் சூறையாடல்:-
பல்வேறு பெருமைகள் வாய்ந்த இந்த திருக்கோவில் முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்களின் படையெடுப்பின் போது கோவிலில் இருந்த அம்மன் சிலை, உற்சவர் சிலைகள் மற்றும் நகைகள் ஆகியவற்றை சூறையாடியது மட்டுமல்லாமல் கோவிலையும் நாசம் செய்துவிட்டனர். இரண்டு பக்கமும் கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த திருக்கோவில இப்போது சிதலமடைந்து ஒருபக்க சுவர்ட்றோடு இடிந்து விழும் நிலையில் உள்ளது.
கோவிலின் முன் காணப்படும் படிகட்டு 1959 ஆம் ஆண்டுதான் கட்டப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் பொதுமக்கள் பாறையில் வெட்டப்பட்ட படிகற்க்களின் வழியாக ஏறி சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
மழை பெய்தால் கோவிலின் மேல்தளத்தில் ஊறி தொடர்ந்து 2 ,3 நாட்களுக்கு சொட்டு சொட்டாக விழுந்து கோவிலின் உள்ளே குளம் போல் மழை நீர் தேங்குகிறது.
திருக்கோவில் புனரமைப்பு:-
இவ்வாறு பல்வேறு பெருமைகள் வாய்ந்த இந்த திருக்கோவிலை புனரமைப்பு செய்ய ஊர் பொதுமக்கள், இந்து பக்தர்கள் பேரவை, உலகலாவிய ஆன்மீக சங்கம் மற்றும் சிவநேய அன்பர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.
" புல்லினால் ஒருகோடி புதுமண்ணால் பத்துகோடி
செல்லுமா ஞாலந்தன்னில் செங்கல்லால் நூறு கோடி
அல்லியங்கோதை கேளாய் அரனுறை ஆலயத்தை
கல்லினால் புதுப்பித்தோர்கள் கயிலைவிட் டகலார்தாமே"
என்னும் திருமூலரின் தமிழ் வேதத்திற்கேற்ப கல்லினால் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலை புனரமைப்பு செய்ய தங்களால் இயன்ற பணவுதவியோ அல்லது பொருளுதவியோ தந்து கல்லினால் கட்டப்பட்ட இந்த திருக்கோவிலை புதுப்பித்து என்றைக்கும் ஈசனின் திருவடி நிழலை விட்டு அகலாமல் வாழ்ந்திருங்கள்.
Veeratesvarar temple, Erumpoondi
Erumpoondi Sivan kovil
Veeratesvarar temple, Erumpoondi
Erumpoondi Sivan kovil
ஓம் நமசிவாய
தொடர்புக்கு:-
அருள்மிகு ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் எரும்பூண்டி, அஞ்சல் குறியீடு எண் 604 601
கீழ்பெண்ணாத்தூர் வட்டம். திருவண்ணாமலை மாவட்டம்.
கீழ்பெண்ணாத்தூர் வட்டம். திருவண்ணாமலை மாவட்டம்.
htps://youtu.be/syZUrg6cN-A
Gmail:- veeratesvararerumpoondi@gmail.com
Contact:-. VENKATESAN 8838815687
Whatsapp:- 7502650065
இங்ஙணம் :-
வீரட்டேஸ்வரர் ஆலய அறக்கட்டளை- எரும்பூண்டி
நடராஜன் 6374434089
அறங்காவலர் குழு தலைவர்
அர்ச்சகர் சண்முகம் M.சிவா R.ஏழுமலை
8124619066 7667422536 9789352608.
Gmail:- veeratesvararerumpoondi@gmail.com
Contact:-. VENKATESAN 8838815687
Whatsapp:- 7502650065
இங்ஙணம் :-
வீரட்டேஸ்வரர் ஆலய அறக்கட்டளை- எரும்பூண்டி
நடராஜன் 6374434089
அறங்காவலர் குழு தலைவர்
அர்ச்சகர் சண்முகம் M.சிவா R.ஏழுமலை
8124619066 7667422536 9789352608.
9092764240
I like very much....
ReplyDeleteஓம் நமசிவாய. நன்றி
Deleteதிருப்பணிக்கு உதவி செய்ய நினைக்கும் பக்தர்கள் veeratesvararerumpoondi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஓம் நமசிவாய
ReplyDeleteஇந்த சிவன் கோவிலில் பென்னகர சாமியார் என்று ஒருவர் வாழ்ந்து வந்தார். கோவிலின் பின்புறத்தில் உள்ள ஏரியில் நீர் நிரம்பியிருந்தால் தண்ணீரின் மீது 2,3 மணிநேரம் மல்லாந்து படுத்தபடியே மிதந்து கொண்டிருப்பார். அவர் நான் இங்கேயே ஜீவசமாதி அடையப் போகிறேன் என்று மக்களிடம் பணம் வாங்கி கருங்கற்கள் உடைத்தார். ஊரில் உள்ள சிலர் இவர் பணம் வாங்கிக்கொண்டு சுருட்டப்பார்க்கிறார் இவர் போலிசாமியார் என்று ஏலிதம் செய்தனர். இதையறிந்த சாமியார் கோவிலின் மலையடிவாரத்தில் மல்லாக்க படுத்து கொண்டு, உங்களால் முடிந்தால் என்னை அசைத்துக்காட்டுங்கள் என்றார். மக்கள் எவ்வளவு முயன்றும் சாமியாரை அசைக்க முடியவில்லை. பின்பு சிறிது காலம் எரும்பூண்டியில் இருந்துவிட்டு வேறு சிவன் ஆலயம் தேடி சென்றுவிட்டார். அருள்மிகு வீரட்டேசுவரர் துணை 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏
ReplyDeleteஎல்லாம் சிவமயம்
Delete