Posts

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வரலாறு

Image
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு இந்த உலகில் அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் ஆன அன்னை ஆதிபராசக்தி எத்தனையோ அவதாரம் எடுத்து அரக்கர்களையும், அதர்மத்தையும் அழித்து மக்களையும் மற்ற உயிர்களையும் காத்து வருகின்றாள். ஆனால் இறைவனை காக்க இறைவி எடுத்த அவதாரமே அங்காள பரமேஸ்வரி அம்மன் அவதாரம். இந்த அம்மன் தமிழகமெங்கும் அங்காளம்மன், அங்காளபரமேஸ்வரி, பெரியாயி, பூங்காவனத்தம்மன், பெரியாண்டிச்சி என்று பல பெயர்களில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறாள். தட்சன் வேள்வி:- தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண வயது வந்ததும் சிவபெருமான் தட்சனுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். தக்கன், சிவபெருமானே தனக்கு மருமகன் ஆகிவிட்டார் என்று ஆணவத்துடன் இருந்தான். ஒருமுறை தட்சன் தனது மகளையும் மருமகனையும் காண கயிலாயம் சென்றான். அங்கிருந்த பூதகணங்கள் தட்சனை மறித்தனர். பூதகணங்களிடம், தட்சன் நான் சிவபெருமானின...

எட்டியம்மன் வரலாறு

Image
உ எட்டியம்மன் வரலாறு       அகிலத்தில் அனைத்திற்கும் ஆதியும் அந்தமும், மூலமும் முடிவுமான அன்னை ஆதிபராசக்தி எத்தனையோ அவதாரம் எடுத்து மக்களையும் மற்ற உயிர்களையும் காத்து வருகின்றாள். எரும்பூண்டி:-       திருவண்ணாமலையில் இருந்து மேல்மலையனூர் செல்லும் வழியில் சுமார் 20 கி.மி தொலைவில் அமைந்துள்ளது எரும்பூண்டி என்னும் கிராமம். விவசாயத்தை அடிப்படை தொழிலாக கொண்ட இந்த கிராமத்தில் பார்க்கும் திசையெல்லாம் கோவில்களைக் கொண்டு எக்காலமும் இறைவன் திருவருளால் செழித்தோங்குகிறது. எட்டியம்மன்:-           எரும்பூண்டி கிராமத்தின் ஈசான்ய திசையில் அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக தோன்றி வடக்கு திசை நோக்கியவாறு எட்டியம்மன் என்ற பெயரில் தன்னை நாடி வரும் பக்தர்களை தேடி வந்து அருள்புரிகிறாள். மண்ணில் உதித்த விதம்:-       ஆதிகாலத்தில் விவசாயி ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்ச வாய்க்கால் வெட்டினார். அப்போது தெரியாமல் மண்வெட்டி பூமிக்கடியில் இருந்த அம்மன் சிலையில் பட்டு சிலையின் மேல் ஒரு பாகம் சிதறி விட்டது. அப்போது கல்லில் இ...

வீரட்டேஸ்வரர் திருக்கோவில்

Image
                                               உ                வீரட்டேஸ்வரர்  திருக்கோவில்                                  எரும்பூண்டி      சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லா அருள்சோதியாக  நின்ற திருண்ணாயில் இருந்து அன்னை  அங்காளபரமேஸ்வரி சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய மேல்மலையனூர் செல்லும் வழியில் சுமார் 20 கி.மி தொலைவில் அமைந்துள்ளது எரும்பூண்டி என்னும் கிராமம். கிராமத்தின் சிறப்பு:-     விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிராமத்தில் நாடகங்கள், பஜனை, கோலாட்டம், கும்மி போன்ற நாட்டுப்புற கலைகள் அடிக்கடி நடைபெறும். மற்றும் வரலாற்றின் பல சுவடுகளை தாங்கி நிற்கிறது இந்த கிராமம்.    1. ப ழமையான கோவில்கள்    2. கல்வெட்டுகள்    3. மாதம் ஒரு திருவ...