Posts

Showing posts from October, 2019

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி வரலாறு

Image
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு இந்த உலகில் அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் ஆன அன்னை ஆதிபராசக்தி எத்தனையோ அவதாரம் எடுத்து அரக்கர்களையும், அதர்மத்தையும் அழித்து மக்களையும் மற்ற உயிர்களையும் காத்து வருகின்றாள். ஆனால் இறைவனை காக்க இறைவி எடுத்த அவதாரமே அங்காள பரமேஸ்வரி அம்மன் அவதாரம். இந்த அம்மன் தமிழகமெங்கும் அங்காளம்மன், அங்காளபரமேஸ்வரி, பெரியாயி, பூங்காவனத்தம்மன், பெரியாண்டிச்சி என்று பல பெயர்களில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறாள். தட்சன் வேள்வி:- தட்சன் சிவபெருமானை நோக்கி தவமிருந்து அன்னை பார்வதி தேவி தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். பார்வதி தேவி அவ்வாறே தக்கனின் மகளாக பிறந்தாள். அவளுக்கு தாட்சாயணி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். தாட்சாயணி தேவிக்கு திருமண வயது வந்ததும் சிவபெருமான் தட்சனுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். தக்கன், சிவபெருமானே தனக்கு மருமகன் ஆகிவிட்டார் என்று ஆணவத்துடன் இருந்தான். ஒருமுறை தட்சன் தனது மகளையும் மருமகனையும் காண கயிலாயம் சென்றான். அங்கிருந்த பூதகணங்கள் தட்சனை மறித்தனர். பூதகணங்களிடம், தட்சன் நான் சிவபெருமானின...