எட்டியம்மன் வரலாறு

உ எட்டியம்மன் வரலாறு அகிலத்தில் அனைத்திற்கும் ஆதியும் அந்தமும், மூலமும் முடிவுமான அன்னை ஆதிபராசக்தி எத்தனையோ அவதாரம் எடுத்து மக்களையும் மற்ற உயிர்களையும் காத்து வருகின்றாள். எரும்பூண்டி:- திருவண்ணாமலையில் இருந்து மேல்மலையனூர் செல்லும் வழியில் சுமார் 20 கி.மி தொலைவில் அமைந்துள்ளது எரும்பூண்டி என்னும் கிராமம். விவசாயத்தை அடிப்படை தொழிலாக கொண்ட இந்த கிராமத்தில் பார்க்கும் திசையெல்லாம் கோவில்களைக் கொண்டு எக்காலமும் இறைவன் திருவருளால் செழித்தோங்குகிறது. எட்டியம்மன்:- எரும்பூண்டி கிராமத்தின் ஈசான்ய திசையில் அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாக தோன்றி வடக்கு திசை நோக்கியவாறு எட்டியம்மன் என்ற பெயரில் தன்னை நாடி வரும் பக்தர்களை தேடி வந்து அருள்புரிகிறாள். மண்ணில் உதித்த விதம்:- ஆதிகாலத்தில் விவசாயி ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்ச வாய்க்கால் வெட்டினார். அப்போது தெரியாமல் மண்வெட்டி பூமிக்கடியில் இருந்த அம்மன் சிலையில் பட்டு சிலையின் மேல் ஒரு பாகம் சிதறி விட்டது. அப்போது கல்லில் இ...