வீரட்டேஸ்வரர் திருக்கோவில்

உ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் எரும்பூண்டி சிவபெருமான் ஆதியும் அந்தமும் இல்லா அருள்சோதியாக நின்ற திருண்ணாயில் இருந்து அன்னை அங்காளபரமேஸ்வரி சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய மேல்மலையனூர் செல்லும் வழியில் சுமார் 20 கி.மி தொலைவில் அமைந்துள்ளது எரும்பூண்டி என்னும் கிராமம். கிராமத்தின் சிறப்பு:- விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிராமத்தில் நாடகங்கள், பஜனை, கோலாட்டம், கும்மி போன்ற நாட்டுப்புற கலைகள் அடிக்கடி நடைபெறும். மற்றும் வரலாற்றின் பல சுவடுகளை தாங்கி நிற்கிறது இந்த கிராமம். 1. ப ழமையான கோவில்கள் 2. கல்வெட்டுகள் 3. மாதம் ஒரு திருவ...